தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு Tamil Nadu Government College Guest Lecturers' Association (TNGGIAT ) சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு திருச்சியில் நடந்தது
(தமிழக அரசின் TMB மூலம் நேரடி நியமனம் பெற்றவர்கள் திமுக அரசின் 13 வது சட்டப்பேரவை 2006 ன் தேர்தல் வாக்குறுதி மற்றும் 15 வது சட்டப்பேரவை 2016 ன் தேர்தல் வாக்குறுதியில் அரசுக்கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என்பதற்கு இணங்க திராவிட மாடல் அரசால் 2023 ல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு PhD, JRF, NET, SET போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்டும் மாநில இடஒதுக்கீட்டின்படி கடுமையான நெறிப்படுத்தலுக்கு உட்பட்டு சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டு கல்லூரிக் கல்வித்துறை (GO.269) மூலம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டு படமாதம் மட்டும் மாதம் ரூ.25000/- சம்பளத்திற்கு பணிபுரிந்து வருவதாகவும் ......
பணிப்பாதுகாப்போடு கூடிய 12 மாதமும் UGC முறைப்படி காலமுறை ஊதியம் வழங்கி பணிவரன்முறைக்கு உட்படுத்தி நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரிக்கல்வி ஆணையர், உயர் கல்வித்துறை செயலர். உயர்கல்வி துறை அமைச்சர், முதலமைச்சர் தனிப்பிரிவு செயலர் மற்றும் நிதித்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை தெரிவித்ததின்பெயரில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டுவரும் பத்திரிக்கை, ஊடகங்கள் வாயிலாக எங்களது கோரிக்கையை வெளிப்படுத்தி தமிழக அரசின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு சென்று எங்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டுகிறோம்.என்றும், பணி பாதுகாப்பும், ஊதிய பற்றாக்குறையை சரி செய்ய ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க. வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் நிர்மல் ராஜ் இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் R.நடராஜன் முனைவர் கே.சம்பத்குமார்' முனைவர் S.ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்
.jpeg)
No comments:
Post a Comment